சமீபத்தில் கன்னடத்தில் அவர் நடித்த சாருலதா படத்தை தமிழில் டப்பிங்
செய்து வெளியிட்டனர். படம் வந்த சுவடே தெரியவில்லை.
அவர் போடும் கண்டிஷன்கள், தன் பாத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என
இயக்குநர்களைப் படுத்துவது போன்ற காரணங்களால் அவரை தமிழ் சினிமா கண்டு
கொள்ளாமல் விட்டுவிட்டது.
தற்போது கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தமிழ்
படங்களில் நடிக்காதது ஏன் என்று பிரியா மணியிடம் கேட்டபோது, "தமிழ்
படங்களில் நல்ல கேரக்டர்கள் வரவில்லை. சாருலதா படத்துக்கு பிறகு என்னை
திருப்திபடுத்தும் கேரக்டர்கள் எதுவும் அமையவில்லை. இதனால் நடிக்கவில்லை.
மலையாளத்தில் 'ட்ரூ ஸ்டோரி' என்ற படத்தில் நடிக்கிறேன். உண்மை
சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கின்றனர். கன்னடத்தில் அம்பரீஷா
என்ற படத்திலும் நடிக்கிறேன்.
சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி படத்தில் குத்தாட்டம் ஆடியதை தெடர்ந்து நிறைய
இந்திப் படங்களில், குத்தாட்டம் போடவே கூப்பிடுகிறார்கள். நான் ஏற்றுக்
கொள்ளவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால் ஆடுவேன். ஆனால்
அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன் படங்களில் ஆட
வாய்ப்பு கிட்டினால் ஆடுவேன். அந்தப் படங்களின் கதை எப்படியிருந்தாலும்
கவலையில்லை," என்றார்.
Comments