அந்த கேள்வி பதில்கள்:
கேள்வி: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் ஆகிய படங்களை
‘ரீமேக்' செய்வதாக இருந்தால், எந்த படத்தில் நடிக்க விரும்புவீர்கள்?
பதில்: என்ன வேடம் என்று கேட்கவில்லையே...
கேள்வி: ஜாக்சன் துரை?
பதில்: ஜாக்சன் துரையாக நடிக்கலாம். ஏனென்றால், ‘தசாவதாரம்' படத்தில்
ஏற்கனவே ‘ப்லெட்சர்' ஆக நடித்திருக்கிறேன். ‘கப்பலோட்டிய தமிழன்' படத்தில்,
சுப்பிரமணிய சிவாவாக நடிக்க ஆசை. ஏனென்றால் அந்த வேடத்தில் எங்க சண்முகம்
அண்ணாச்சி நடிச்சிருந்தார்.
கேள்வி: இந்திய சினிமா நூற்றாண்டின் பரிசாக ரஜினிகாந்தும், நீங்களும்
இணைந்து நடிப்பீர்களா?
பதில்: உங்களுக்கு பரிசு... எங்களுக்கு? முதலில் இரண்டு பேரையும் வைத்து
படம் எடுக்கிற அளவுக்கு வசதியான தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். நான்
இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை.
கேள்வி: கிருஷ்-3, விஸ்வரூபம்-2 மாதிரி சச்சின்-2, கமல்ஹாசன்-2 வர
முடியுமா?
பதில்: அடுத்த தலைமுறை நிச்சயமாக வரும். எங்களை விட திறமையானவர்கள்
நிச்சயமாக வருவார்கள்.
கேள்வி: தணிக்கை குழுவில் தகுதியானவர்கள் இருக்கிறார்களா?
பதில்: தணிக்கை குழுவில் சினிமாவை ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். அரசியல்
கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் ஆட்கள் அங்கே இருக்க வேண்டும் என்றும்
ஆசைப்படுகிறார்கள். முழுமையாக சினிமாவை தெரிந்தவர்கள் இருந்தால், தணிக்கை
குழு இன்னும் நன்றாக இருக்கும்!''
Comments