சேலம்: ஏற்காடு இடைத்தேர்தலுக்கான ஓட்டு பதிவு இன்று காலை 8 மணிக்கு
துவங்கியது. காலை முதலே, தொகுதியில் உள்ள 290 ஓட்டு சாவடிகளிலும்
விறுவிறுப்பான ஓட்டு பதிவு காணப்பட்டது. அனைத்து சாவடிகளிலும், பொதுமக்கள்
குறிப்பாக பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். மாலை 5 மணிக்கு
ஓட்டு பதிவு முடிந்தது. ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில், மொத்தம் 86
சதவீதம் ஓட்டு பதிவு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
Comments