தனி நபரை காட்டிலும் எம்.பி.,க்களின் வருமானம் 68 சதவீதம் அதிகம்

புதுடில்லி: இந்திய எம்.பி.,க்களின் வருமானம் நாட்டின் தனிநபர் வருமானத்தை காட்டிலும் 68 சதவீதம் அதிகமாக உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தனிநபர் வருமானத்தை காட்டிலும் அதிகம்:

நமது நாட்டின் தனிநபர் ஈட்டும் வருமானத்தை காட்டிலும் நமது எம்.பி.,க்களின் வருமானம் 68 சதவீதமாக உள்ளது. அடுத்த இடத்தை கென்யா, சிங்கப்பூர், ஜப்பான், இத்தாலி, ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளது. இந்திய எம்.பி.,க்களின் வருமானம் அமெரிக்காவை விட இரு மடங்காக உள்ளது.


தற்போதைய பார்லிமென்ட் எம்.பி.,க்களி்ல் சுமார் 152 உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளது. இது மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கையி்ல 31 சதவீதமாகும். இவற்றில் 17 சதவீதம் வரையில் பெண் எம்.பி.,க்கள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவாகியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
கூட்டத் தொடர்கள் பாதிப்பு:

கடந்த 2011-12 கால கட்டங்களில் ராஜ்யசபா , லோக்சபாவில் நடைபெற்ற 577 மணி நேர கூட்டங்களில் 442 மணி நேரம் கூச்சல் குழப்பம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் இந்த காலகட்டங்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு நான்கு மணி நேரம் மட்டுமே அலுவல் பணி நடைபெற்றுள்ளது. 577 மணி நேரத்தி்ல் 227 மணி நேரமும், ராஜ்யசபாவில் 744 மணி நேரத்தி்ல 228 மணி நேரமும் மட்டுமே பணிகள் நடைபெற்றுள்ளது.

ஒவ்வொரு 32.75 நிமிடங்களுக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாகவும்,. இதன்படி 1995 முதல் 2010-ம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் 2 லட்சத்து 56 ஆயிரத்து 913 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் உள்ளூர் வளர்ச்சி திட்டங்களுக்காக ஆண்டு தோறும் ரூ. 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. அது 2010-11-ம் ஆண்டில் 5 ஆயிரத்து 799.3 கோடி ரூபாயாகவும், 2011-12-ம் ஆண்டில் 9 ஆயிரத்து 963.9 கோடி ரூபாயாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2004-ம் ஆண்டில் 2.81 கோடியிலிருந்து 2011-ல் 3.17 கோடியாக அதிகரித்துள்ளது.

மேற்கண்ட ஆய்வினை சுப்ரீம் கோர்ட்நீதிபதி அனன்காபட்நாயக் மற்றும் முன்னாள் தலைமை தகவல்ஆணயைர் சத்தியானந்த் மிஸ்ரா ஆகியோர்களை கொண்ட நேஷனல் சோஷியல் வாட்ச் ஆன் கவர்னன்ஸ் அண்டு டெவலப்மெண்ட் 2013 வெளியிட்டுள்ளது.

Comments