இதுகுறித்த விவரம் வருமாறு: அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் அடிப்படையில், 2015ம் ஆண்டு முதல், தினமும், 6 மணி, 10 நிமிடம் வீதம், வாரத்திற்கு ஆறு நாட்களில், 45 மணி நேரம் பள்ளிகள் இயங்கும்.பள்ளி வேலை நேரத்திற்குப் பின், ஒரு மணி, 20 நிமிடங்களுக்கு,
பள்ளி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ, படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் எடுப்பதற்காக, ஆசிரியர்கள், 200 மணி நேரம் ஒதுக்க வேண்டும். பள்ளி பாடத்திட்டத்தில், தினசரி எட்டு வகுப்புகள் (பீரியட்) இருந்தால், முதல் பீரியட்டில் இருந்து ஐந்தாவது பீரியட் வரை, 45 நிமிடங்களாகவும், அதற்குப் பின், 40 நிமிடங்கள் வீதம் வகுப்புகள் நடைபெறும்.இவ்வாறு, சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவித்துள்ளது.
Comments