காடுவெட்டி குரு மீது கடந்த சில
மாதங்களில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாய்ந்த நான்காவது வழக்கு
இது. நான்கிலும் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக,
ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.வான காடுவெட்டி குரு கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம்
தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து,
காடுவெட்டி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், தன் மீதான தேசிய
பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த
மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, குரு மீதான நடவடிக்கையை ரத்து
செய்து உத்தரவிட்டார். இதே வழக்கில் 4 முறை காடுவெட்டி குரு அடுத்தடுத்துக்
கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும்
விடுதலையாகியுள்ள குரு மீது இந்த சட்டம் மீண்டும் பாயுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.
Comments