சென்னை,
தலைமைச் செயலகத்தில், மூன்று நாட்கள் நடந்த, கலெக்டர் மற்றும் போலீஸ்
அதிகாரிகள் மாநாடு, நேற்று மாலை, நிறைவு பெற்றது. நிறைவு நிகழ்ச்சியில்,
முதல்வர் ஜெயலலிதா, 312 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவற்றில் முக்கியமானவை:
* தற்போது, கன்னக்கொள்ளை மற்றும் திருட்டில், திருடு போன பொருட்களின் மதிப்பு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அது கடும் குற்றமாக கருதப்படுகிறது. இத்தொகை மதிப்பை, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த, திருத்தம் கொண்டு வரப்படும்.
* மதுரை கன்னியாகுமரி சாலையில், திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையும் இணைக்கும் வகையில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே, பழைய பாலம் அருகே, புதிய உயர்மட்ட பாலம் கட்டப்படும்.
*திருவண்ணாமலையில், மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்படும். ஒன்பது முக்கிய சாலைகளில், கார் நிறுத்தம் ஏற்படுத்தப்படும். படவேடு ஊராட்சியில், கமண்டலநாகநதி குறுக்கே, உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.
* புதுக்கோட்டை மாவட்டத்தில், பொன்னமராவதி போலீஸ் நிலையம், திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், ஆகியவற்றுக்கு, புதிய கட்டடம் கட்டப்படும்.
*பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கப்படும்.
* வாகன விபத்தில், இறப்போர் குடும்பத்திற்கு, இழப்பீட்டு தொகையாக, 50,000 ரூபாய், காயமடைந்தோருக்கு 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகை, 2 லட்சம் மற்றும், ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
*நீலகிரி மாவட்டத்தில், முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, முழு பேன்ட், முழுக்கை சட்டை, மாணவியருக்கு சல்வார் கமீஸ், ஓவர்கோட் வழங்கப்படும்.
* குன்னூர் நகராட்சிக்கு, எமரால்டு அணையிலிருந்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 50 குடியிருப்புகளுக்கு மேல் உள்ள ஊராட்சிகளுக்கு, "தாய்' திட்டத்தில் வழங்கப்படும் நிதி, உயர்த்தி வழங்கப்படும்.
* மலையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், ஊக்கத்தொகை, 1,500 ரூபாயாகவும், குளிர்காலப் படி, 500 ரூபாயாகவும், உயர்த்தி வழங்கப்படும்.
* வைகை நதியில், வாலிபாறை, கோவிந்தநகரம் பகுதியில், தடுப்பணை கட்டப்படும்.
* சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், "அம்மா உணவகம்' திறக்கப்படும்.
* சிவகங்கை மாவட்டம், அமராவதிபுதூர், பூசலகுடி பகுதியில், துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
* திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படும்.
* திருவள்ளூரில், நவீன ஒருங்கிணைப்பு பஸ் நிலையம், புதிதாக உருவாக்கப்படும்.
* திருவொற்றியூர், மதுரவாயலில், புதிதாக தாலுகா கட்டடம் கட்டப்படும்.
*திருத்தங்கல் ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா தலைமை மருத்துவமனையாக, தரம் உயர்த்தப்படும்.
* சிவகாசி அடுத்த ஆடையூர் ஊராட்சியில், சிவகாசி தென்காசி சாலையில், ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். அதேபோல், ராஜபாளையம் நகராட்சிப் பகுதியில், ராஜபாளையம் தென்காசி சாலையில், ரயில்வே மேம்பாலம் கட்டப்படும்.
* திருவாரூர் மாவட்டத்தில், எட்டு குளங்கள் புனரமைக்கப்படும்.
* திண்டுக்கல் மாவட்டத்தில், கொடகனார் ஆற்றின் குறுக்கே, இரண்டு தடுப்பணை, சந்தானவர்தனி ஆற்றின் குறுக்கே, மூன்று தடுப்பணை கட்டப்படும்.
* மகாமகத்தையொட்டி, கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், அடிப்படை வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.
* கூட்டுறவு வங்கிகளில், கல்விக் கடன் வழங்குவது குறித்து, ஆய்வு செய்து முடிவு அறிவிக்கப்படும்.
* ராமநாதபுரம் மாவட்டத்தில், 1,200 குடிநீர் ஊரணிகள், 755 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 437 முன்னாள் ஜமீன் குளங்கள், ஆகியவை சீரமைக்கப்படும்.
* ராமேஸ்வரத்தில், மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.
* தனுஷ்கோடி, டி.மரியூர், பாம்பன், முகுந்தரயசத்திரம், தங்கச்சிமடம், வேதாளை, ஆகிய இடங்களில், மீன் இறக்கு மையம் அமைக்கப்படும்.
* சேலம் மாவட்டம், பனைமரத்துபட்டி மற்றும் தலைவாசல் பகுதியில், விதை கிடங்கு அமைக்கப்படும்.
* காஞ்சிபுரம் மாவட்டம், பாலூரில் பாலாற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டப்படும்.
* செங்கல்பட்டு போலீஸ் சப் டிவிஷனலிருந்து, வண்டலூரை தலைமையிடமாகக் கொண்டு, தனி சப் டிவிஷன் உருவாக்கப்படும்.
* சென்னையில், புதிதாக ஐந்து தாலுகா அலுவலகங்கள் கட்டப்படும்.
* வேலூர் சிறையில், டி.ஐ.ஜி., பணியிடம் ஏற்படுத்தப்படும்.
Comments