25 கிரேட்டஸ்ட் இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி- இன்று குடியரசுத் தலைவர் கவுரவிக்கிறார்!

25 கிரேட்டஸ்ட் இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி- இன்று குடியரசுத் தலைவர் கவுரவிக்கிறார்!டெல்லி: என்டிடிவி நடத்திய கிரேட்டஸ்ட் இந்தியர்கள் 25 பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடமும், சச்சின் டெண்டுல்கருக்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளன. என்டிடிவி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியானதைக் கொண்டாடும் வகையில் ஒரு ஆன்லைன் கருத்துக் கணிப்பை சில மாதங்களாக அந்நிறுவனம் நடத்தியது. இதில் இந்தியாவின் அனைத்துத் துறையைச் சேர்ந்த பிரரபலங்கள், சாதனையாளர்கள் பட்டியலிடப்பட்டிருந்தனர். அதாவது இப்போது உயிருடன் உள்ள சாதனையாளர்கள்தான் இந்தப் பட்டியலில் இடம்பெற்றனர்.

பொதுமக்கள் இணையதளம் மூலம் வாக்களிக்க வேண்டும். இந்த வாக்கெடுப்பின் முடிவு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ரஜினிகாந்த்
 
இதில் சூப்பர் ஸ்டார் 6.43 விகித வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆரம்பத்திலிருந்தே ரஜினிதான் இந்த கணிப்பில் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சச்சின் டெண்டுல்கர்
 
அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். அவரும் ரஜினி அளவுக்கு வாக்குகள் பெற்றிருந்தாலும், நடுவர்களின் வாக்கு மற்றும் கருத்துக் கணிப்பின் விதிமுறைகள் படி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். 
 
ஏஆர் ரஹ்மான்
 
மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை தந்த ஏஆர் ரஹ்மான்.
 
ரத்தன் டாடா
 
தொழிலதிபரும், டாடா குழும முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.
 
ஷாரூக்கான்
 
பாலிவுட்டின் கிங் என புகழப்படும் ஷாரூக்கானுக்கு இந்த பட்டியலில் 5வது இடம் கிடைத்துள்ளது.
 
கபில்தேவ்
 
25 பேருக்கான பட்டியலில் அமிதாப் பச்சனுக்கு 9வது இடமும், கிரிக்கெட் சாதனையாளர் கபில் தேவுக்கு 15வது இடமும் கிடைத்துள்ளன.
 
இன்று விருது
 
இந்த போட்டியில் முதல் 25 சாதனையாளர்களை நேரில் அழைத்து கவுரவிக்கிறது என்டிடிவி. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று சாதனையாளர்களை கவுரவிக்கிறார்.
 
ரஜினி பங்கேற்பு?
 
இந்த விழாவில், பட்டியலில் முதலிடம் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் பங்கேற்பார் என்று தெரிகிறது.

Comments