
நியூயார்க்: பிரபல அமெரிக்க முதலீட்டாளரும், ஓட்டல் அதிபருமான, வாரன் பபே,
தினமும், 230 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள, "வெல்த் எக்ஸ்' என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில்
கூறியிருப்பதாவது: இந்த ஆண்டின் மிக அதிக வருமானம் உள்ள கோடீஸ்வரர்கள்
பட்டியலில், வாரன் இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.முதலாவது இடத்தில்
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளார். வாரன் பபேயின் நடப்பு ஆண்டு
வருமானம்,
80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து, மொத்த சொத்துகளின் மதிப்பு
3.70 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இவ்வாறு "வெல்த்எக்ஸ்' ஆய்வு
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments