மும்பை:டிச., 22 ல் பா.ஜ.,வின் மகா கர்ஜனை

மும்பை:மும்பையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வரும் 22ல் மகா கர்ஜனை என்னும் மகா பேரணியை கூட்ட பா.ஜ.,திட்டமிட்டுள்ளது. இப்பேரணியை பிரமாண்டமாக நடத்த பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் முடிவு செய்துள்ளார். அதற்காக நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புற மக்களையும் கவர முக்கிய ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்துவருகிறார்கள்.இதற்கான ஆலேசானை கூட்டம் நேற்று நடந்தது.


ஆலோசனை:

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு தங்கள் கட்சியின் செல்வாக்கை உயர்த்த கிராமப்புறங்களில் உள்ள மக்களும் இப்பேரணியில் பங்கேற்க முக்கிய ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ., வட்டாரம் தெரிவிக்கிறது.

மோடி பங்கேற்பு:

இந்த மகா பேரணியில் பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் , பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி , கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி மற்றும் கட்சி தலைவர்கள் கோபிநாத் முண்டே , ஏக்நாத்,வினோத் பா.ஜ., பொது செயலாளர் ராஜீவ் பிரதாப் ரூடி மகாராஷ்டிரா பாஜக அலுவலக பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்குபெறுகின்றனர்.

பிரதாப் ரூடி ஆலோசனை:

பேரணியில் மாநிலம் முழுவதும் இருந்து ஆர்வலர்கள் பங்கு பார்க்கும் வகையில் ரூடி, போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.மேலும்மகாராஷ்டிரா பா.ஜ.,தலைவர் தேவேந்திர பத்நவிஸ் கூறுகையில்,மாநிலத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் அடித்தட்டு ஆர்வலர்கள் அதை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.சமீபத்தில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.,விற்கே வெற்றி வாய்ப்பு சாதமாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

Comments