2014ல் திருமணம்: தாயாருடன் த்ரிஷா தங்ககோவிலில் தரிசனம்

2014 trisha to marryநடிகை த்ரிஷாவுக்கு 2014ம் ஆண்டில் திருமணம் செய்து வைக்க அவரது தயா£ர் உமா கிருஷ்ணன் முடிவு செய்திருக்கிறார். இதற்கு த்ரிஷாவும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. த்ரிஷாவின் ஜாதகப்படி 2014ம் ஆண்டு த்ரிஷாவுக்கு திருமணத்துக்கு சாதகமான ஆண்டாக இருப்பதால் இந்த ஆண்டில் திருமணம் செய்துவிட முடிவு செய்திருக்கிறார்.

இதையொட்டி குடும்ப ஜோதிடரின் அறிவுரைப்படி கோவில்களுக்கு தனியாகவும், மகளுடனும் சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார். அந்த வகையில் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு த்ரிஷாவுடன் ரகசிய விசிட் அடித்தார் உமா கிருஷ்ணன்.


அங்கு 70 கிலோ தங்கத்தினாலான சுவர்ண லட்சுமி சிலைக்கு பாலபிஷேகம் செய்து த்ரிஷா வழிபட்டார். அதன் பிறகு அவர் தாயாரும் பாலாபிஷேகம் செய்தார். பின்னர் த்ரிஷாவுக்கும், அவரது தாயாருக்கும் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கோவிலில் இருந்து விட்டு பின்னர் கிளம்பிச் சென்றனர்.

Comments