பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மியின் 18 நிபந்தனைகள்

பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மியின் 18 நிபந்தனைகள்டெல்லி: பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆதரவைப் பெறுவதற்கு 18 நிபந்தனைகளை விதித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை அக்கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோருக்கு கெஜ்ரிவால் அனுப்பியுள்ள 18 நிபந்தனை கடிதம்:

- டெல்லியில் விஐபி கலாச்சாரம் என்பது நிறுத்தப்பட வேண்டும். எந்த ஒரு எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் அதிகாரியும் சிவப்பு சுழல் விளக்கு காரில் பயணிக்க கூடாது. அதேபோல் ஆடம்பர பங்களாக்களில் வசிப்பதும் சிறப்பு பாதுகாப்பு கோருவதும் கூடாது.
 
- அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன்லோக்பால் மசோதாவை அப்படியே நிறைவேற்ற வேண்டும்.
 
- ஒவ்வொரு காலனி உட்பட அனைத்து நிலைகளிலும் மொஹல்லா சபாக்கள் உருவாக்கப்பட்டு அவையே தீர்மானிக்க வேண்டும்.
 
-டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
 
-டெல்லியில் செயல்படும் அனைத்து மின்சார நிறுவனங்களும் தணிக்கைக்குட்படுத்தப்பட வேண்டும். அப்படி உட்படுத்திக் கொள்ள தயாராக  இல்லாத நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து.
 
-மின்சார மீட்டர்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.
 
-ஒருநாளைக்கு 220 லிட்டர் நீர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்னவானது?
 
-ஒழுங்குபடுத்தாத காலனிகள் முறைப்படுத்துதல் அவசியம்.
 
-குடிசைவாழ் மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள் வழங்கப்பட வேண்டும்.
 
-தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்பட வேண்டும்.
 
-ஒவ்வொரு சாதாரண வர்த்தகருக்கும் சாலைகள், மின்சாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.
 
-சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை கடுமையாக எதிர்க்கிறோம்.
 
-கிராமப்புற விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
 
-500 அரசு பள்ளிகள் திறப்பது, தனியார் பள்ளிகளுக்கான நிதி உதவியை நிறுத்தல் , கட்டண முறையை பகிரங்கப்படுத்தல்
 
-நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள் திறப்பது
 
-பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு குழுக்களள் அமைத்தல்
 
-அனைத்து வழக்குகளையும் 6 மாத காலத்துக்குள் தீர்வு காணும் வகையில் நீதித்துறை மேம்பாடு
 
-இந்த பிரச்சனைகளில் டெல்லி மாநாகராட்சியின் ஒத்துழைப்பு எப்படியானதாக இருக்கும்? ஆகிய பிரச்சனைகள் குறித்த நிலைப்பாட்டை கேட்டு அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Comments