
சென்னை: சூரியனை நேற்று கடந்த, "ஐசன்' வால் நட்சத்திரத்தை, எதிர்பார்த்தபடி
பார்க்கவோ, கண்காணிக்கவோ முடியவில்லை' என, தமிழ்நாடு அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. சூரிய குடும்பத்தை சார்ந்த, "ஐசன்'
வால் நட்சத்திரம், அதன் நீள்வட்ட சுற்றுப் பாதையில், சூரியனை நோக்கி வந்து
கொண்டிருந்தது. நேற்று காலை, 18 லட்சம் கி.மீ., தூரத்தில், சூரியனை
கடக்கும். அப்போது, அதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என,
தமிழ்நாடு அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப மையம் அறிவித்திருந்தது. ஆனால்,
திட்டமிட்டபடி, சூரியனை கடந்த, "ஐசன்' வால் நட்சத்திரத்தை கண்காணிக்க
முடியவில்லை. இதுகுறித்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வட்டாரங்கள்
கூறுகையில், ""நேற்று அதிகாலை, இருள் கலைவதற்கு முன், சூரியனைக் கடக்கும்,
"ஐசன்' வால் நட்சத்திரத்தை பார்க்க முடியும் என, எதிர்பார்த்தோம். ஆனால்,
கடும் மேக மூட்டம் இருந்ததால், சூரியனின் மின்னூட்ட கதிர்கள் பட்டு, "ஐசன்'
வால் நட்சத்திரம் மிளிர்வதை அறிய முடிவில்லை. "ஐசன்' வால் நட்சத்திரம்,
டிச., 26ம் தேதி பூமியை கடக்கிறது. அப்போது, பார்க்க நடவடிக்கை எடுத்து
வருகிறோம்,'' என்றனர்.
Comments