தடுக்கப்பட்ட "பிரஸ்' வாகனம் : பிரசாரத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாகனத்துக்கு முன்னும், பின்னும் பத்திரிகையாளர்கள் வாகனங்களில், செய்தி சேரிக்க வந்தனர். பேளூர் வேட்டைக்காரனூர் பகுதியில், முதல்வர் வாகனம் நிறுத்தப்பட்டதை அறிந்து, அவற்றை போட்டோ எடுத்ததை கண்டு, கிருஷ்ணகிரி மாவட்ட, எஸ்.பி., செந்தில், பத்திரிகையாளர்களை கடிந்து கொண்டார். பத்திரிகையாளர் வந்த நான்கு வாகனங்களை, முதல்வர் வாகனத்தின் பின்னால் செல்ல அனுமதிக்கக் கூடாது என, அங்கிருந்த போலீசாருக்கு அவர் தடைபோட்டார். கட்சி வாகனங்கள் அனைத்தையும் அனுப்பிவிட்டு, அதன்பின், பத்திரிகையாளர் வாகனத்தை அனுப்பினார். இதனால், முதல்வரின் பிரசாரத்தில் செய்தி, போட்டோ எடுக்க முடியாத நிலைக்கு நிருபர்கள் தள்ளப்பட்டனர். அ.தி.மு.க.,வின் பிரசார செய்தியை எடுக்க, எஸ்.பி., தடை விதிப்பதை கண்டு, அங்கிருந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Comments