அடிபம்பு தண்ணீரை பயன்படுத்த மாட்டோம்: மே.வ. மக்கள் பிடிவாதம்

சுந்தர்பன்ஸ்:குடிநீருக்காக போடப்படும் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க பயன்படுத்தப்படும், கை அடிபம்பின், 'வாஷர்' மாட்டுத் தோலால் தயாரிக்கப்படுவதால், 'அடிபம்புகளைப் பயன்படுத்த மாட்டோம்' என கூறி, ஆண்டாண்டு காலமாக, குளம், குட்டைகளில் உள்ள தண்ணீரை பருகி வருகின்றனர்.

பிடிவாதம் :


மேற்கு வங்க, வைதீக குடும்பத்தினர்.இம்மாநிலத்தின் சுந்தரவனக் காடுகள் பகுதியில், ஏராளமான தீவுக்கூட்டங்கள் உள்ளன. அவற்றில் வசிக்கும் இந்து வைதீகர்கள், தங்கள் மத வழக்கப்படி, சுத்த சைவமாக உள்ளனர். மறந்தும்கூட, அவர்கள், அசைவங்களை சாப்பிடுவது இல்லை.
இதனால், எந்தப் பிரச்னையும், யாருக்கும் இல்லை என்றாலும், தங்கள் உடல் நலத்தை தாங்களே கெடுத்துக் கொள்வது போல், 'திறந்தவௌி நீரைத் தான் பருகுவோம்; அடிபம்புகளைப் பயன்படுத்தி, தண்ணீரை எடுக்க மாட்டோம்' என, அவர்கள் பிடிவாதமாக உள்ளனர் என, கவலை தெரிவிக்கின்றனர், அப்பகுதி சுகாதார அலுவலர்கள்.ஏனெனில், 'அடிபம்புகளில் பொருத்தப்படும், வாஷர், மாட்டுத் தோலால் ஆனது என்பதால், அந்த வாஷரில் பட்டு எடுக்கப்படும் தண்ணீரை பருக மாட்டோம்; பயன்படுத்த மாட்டோம்' என்பதில், அந்த வைதீக மக்கள் உறுதியாக உள்ளனர்.
விழிப்புணர்வு க்கு அரசு ஏற்பாடு:


இதனால், நீரால் பரவும் நோய்களுக்கு எளிதில் ஆளாகிவிடுகின்றனர்.அவர்களின் நம்பிக்கையால், அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக அச்சம் அடைந்துள்ள மாநில நிர்வாகம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, ஆழ்குழாய் கிணற்று நீரை கொதிக்க வைத்து பருகச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், அப்பகுதி மக்கள், எளிதாக தங்கள் நம்பிக்கையை கைவிடுவதாக இல்லை. கைப்பம்புகளைப் பயன்படுத்த மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

Comments