திருநெல்வேலி: திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனராக இருந்த
ராஜராஜன், மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவரது இடத்திற்கு
சென்னையிலிருந்து சுரேஷ் குமார் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில்,
சென்னையிலிருந்து நான்கு நாட்களுக்கு முன்பாகவே நெல்லை வந்த சுரேஷ் குமார்,
பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் போலீஸ் கெஸ்ட் ஹவுசில் தங்கியிருக்கிறார்.
கடந்த திங்கட்கிழமை அஷ்டமி, செவ்வாய் நவமி என்பதால் அவர் பொறுப்பை ஏற்க
வில்லை என கூறப்படுகிறது. நெல்லையில் கொலை, கொள்ளை நடந்து வரும் வேளையில்,
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்,பொறுப்பேற்க நல்ல நாள் பார்த்து காத்திருப்பது
பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments