கத்திரிக்காய்
கத்திரிக்காயில் இரும்புச்சத்து அதிகம் இருந்தாலும், இதனை கர்ப்பிணிகள்
அதிகம் உட்கொண்டால், இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள்
கூறுகின்றனர். எனவே இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது.
வெந்தயக் கீரை
கர்ப்பிணிகளுக்கு ஒரு ஆபத்தான ஒரு கீரை என்றால் அது வெந்தயக்கீரை தான்.
ஏனெனில் வெந்தயக் கீரையை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சிசுவின் மூளை
வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இந்த கீரையை கர்ப்பிணிகள்
இறுதி மூன்று மாதங்களில் தொடவேக் கூடாது.
பசலைக் கீரை
என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம் பசலைக் கீரையை அதிகம் உட்கொண்டாலும்,
கருச்சிதைவு ஏற்படும். அதிலும் இந்த கீரையை தினமும் உட்கொண்டு வந்தால்,
விரைவில் கருச்சிதைவு ஏற்படும். எனவே இந்த கீரையை மாதத்திற்கு ஒரு முறை
சாப்பிட்டால் போதும்.
ப்ராக்கோலி
கசப்பு தன்மையுடைய ப்ராக்கோலியை தினமும் கர்ப்பமாக இருக்கும் போது
உட்கொண்டால், அது கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முதல் மூன்று
மாதங்களில் இதனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிக அளவில்
நிறைந்துள்ளது. எனவே தினமும் உட்கொண்டால் கருச்சிதைவு தான் தீர்வாகும்.
காலிஃப்ளவர்
கர்ப்பமாக இருக்கும் போது காலிஃப்ளவர் சாப்பிட்டால் நல்லது என்று
சொன்னாலும், இதனை கோபி மஞ்சூரியன் போன்று செய்து சாப்பிட்டால், பின்
கர்ப்பமானது பிரச்சனையாகிவிடும். ஏனெனில் இதிலும் வைட்டமின் சி எண்ணற்ற
அளவில் நிறைந்துள்ளது.
பீட்ரூட்
வைட்டமின் கே மற்றும் இரும்புச்சத்து அதிக்ம் நிறைந்துள்ள பீட்ரூட்டை
கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லதல்ல. மேலும் பீட்ரூட் உடலில் வெப்பத்தை
அதிகரிப்பதால், இதனை உட்கொண்மால், இரத்தக்கசிவை ஏற்படுத்தும். எனவே இதனை
கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது.
குடைமிளகாய்
குடமிளகாயின் சுவை அனைவரையும் ஈர்க்கும். ஆனால் இதனை சாப்பிட்டால்,
கர்ப்பத்தில் பிரச்சனை ஏற்படும். ஆகவே பிரசவம் முடியும் வரை இதனை
சாப்பிடுவதை சற்று தவிர்க்கலாமே!
கேல்
கீரைகளில் ஒன்றான கேல் கீரையை கர்ப்பத்தின் போது சாப்பிட ஆசைப்பட்டால், ஒரு
ஸ்பூனுக்கு மேல் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது கருவிற்கு ஆபத்தை
விளைவிக்கக்கூடியது.
மிளகாய்
கர்ப்பத்தின் போது பெண்கள் நிச்சயம் காரமான உணவுகளை அதிகம்
உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது சில சமயங்களில் குறைப்பிரசவம் அல்லது
கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.
Comments