ஆந்திராவை தாக்கும்
தற்போது உருவாகி வரும் புதிய புயல் மேற்கு வடமேற்காக நகர்ந்து ஆந்திராவில்
கரை கடக்க வாய்ப்புள்ளது. இன்னும் சில தினங்களில் புயல் ஆந்திராவை
தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வலிமையான புயல்
இந்த புதிய புயல், கடந்த ஆண்டு உருவான நீலம் புயலை விட வலிமையாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
24 மணி நேரத்தில்
அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புயல் சின்னம் தீவிரம் அடையும். அடுத்த 2
அல்லது 3 நாட்களில் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும். அதை
தொடர்ந்து புயல் தாக்கலாம் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்தவாரம் தொடங்க வாய்ப்புள்ளது என வானிலை
ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் அதன் அறிகுறியாக புயல்சின்னம்
உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments