கனிமொழிக்கு பாதுகாப்பு இல்லை : வருத்தப்படுகிறார் மகளிரணி செயலர்

திருவாரூர்: ""தி.மு.க.,வின் கனிமொழிக்கே பாதுகாப்பு இல்லை,'' என, அ.தி.மு.க., மாநில மகளிரணி செயலர் கூறினார். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் நடந்த, மாவட்ட அ.தி.மு.க., மகளிரணி கூட்டத்தில், மாநில மகளிரணி செயலர், சசிகலா புஷ்பா பேசியதாவது: லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., அதிக ஓட்டுகள் பெற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். தி.மு.க.,வில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது; ஏன் கனிமொழிக்கே பாதுகாப்பு இல்லை என்பதை அனைவரும் உணர்வர்.
எனவே, தி.மு.க., கூட்டணியைப் புறக்கணித்துள்ள மக்களுக்கு, ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்துக் கூறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Comments