குப்பை தொட்டியில் ஆண் குழந்தை மீட்பு

திருப்பூர்: குப்பை தொட்டியில் கிடந்த, பிறந்த சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டது. திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள, குப்பை தொட்டியிலிருந்து, நேற்று காலை, குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடன், அப்பகுதியை சேர்ந்த சிலர், தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல், துணி சுற்றிய நிலையில் குப்பைத் தொட்டியில் கிடந்த ஒரு குழந்தையை மீட்டனர். உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது; முதலுதவிக்குப் பின் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.
டாக்டர்கள் கூறுகையில், "இந்த ஆண் குழந்தை பிறந்து, ஒரு மணி நேரம் தான் இருக்கும். தொப்புள் கொடியை கவனமாக அகற்றி விட்டோம். 2.5 கிலோ எடையுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் பாதுகாக்கப்படுகிறது; குழந்தை ஆரோக்கியமாக உள்ளது' என்றனர்.

Comments