சியோல்: வட கொரியாவினி் அணு ஆயுத தாக்குதல் மிரட்டலை தொடர்ந்து,
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகள் இணைந்து பசிபிக் கடலில்
போர் ஒத்திகையை நடத்தி வருகின்றன. இதில், அணு ஆயுதங்கள் தாங்கிய
விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.
இது குறித்து செய்தி
வெளியிட்டுள்ள வட கொரியா, 'இந்த போர் ஒத்திகை, கொரிய தீபகற்பத்தில்
எதி்ர்பாராத பேரழிவுகளை உருவாக்கும். அந்த அழிவுகளுக்கு அமெரிக்கா தான்
பொறுப்பேற்க வேண்டும்,' என எச்சரித்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள
அமெரிக்க ராணுவ அதிகாரிகள், 'பேரிடர் காலத்தில் மனிதாபிமானத்துடன் உதவுவது
எப்படி என்பது குறித்து பயிற்சி பெறவே இதுபோன்ற போர் ஒத்திகை
நடத்தப்படுகிறது,' என கூறி உள்ளனர்.
Comments