மூன்று ஆண்டுகளுக்கு முன் அம்மாபட்டி தெரு மக்கள் வீடுகளை காலி செய்து, பாலுத்து கரட்டுப் பகுதியில் தங்கினர். இதனால், இரு தரப்பினருக்கும் உரிமைப்பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஐகோர்ட் மதுரை கிளை, புரட்டாசி திருவிழா நடத்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி அறங்காவலர் குழுத்தலைவர் தங்கமுத்து தலைமையில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர் ராஜா முன்னிலையில், திருவிழா நடத்த வேண்டும்.
நேற்று விழா துவங்கியது. கடந்த வாரம் அம்மாபட்டி தெரு மக்கள் சார்பில், ஒட்டப்பட்ட போஸ்டரில், "கோர்ட் உத்தரவை மதிக்காமல், ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளும் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "கோர்ட் உத்தரவை அவமதித்து, போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று செயல் அலுவலர் ராஜா போலீசில் புகார் செய்தார். அம்மாபட்டித் தெரு சங்கன், நாராயணன், வெள்ளைச்சாமி, மாயாண்டி, கணேசன், முருகன் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. அம்மாபட்டி தெரு மக்கள், "திருவிழாவில் குதிரை தூக்குவதற்கும், பால்குடம் எடுப்பதற்கும் அனுமதிக்க வேண்டும்,' என்று கோரினர். அதை அதிகாரிகள் நிராகரித்தனர்.
நேற்று காலை அம்மாபட்டித் தெருவைச் சேர்ந்தவர்கள், கால்நடைகளுடன் வெளியேறி, 40 கி.மீ., துரத்தில் உள்ள மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி மலைப்பகுதிக்கு சென்று தங்கினர்.
பெரியகுளம் ஆர்.டி.ஒ., ராஜேந்திரன் கூறியதாவது: அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி, கோயில் விழா நடைபெற வேண்டும், என்று கோர்ட் ஆணை உள்ளது. அதன்படி விழா நடத்த சிறப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாரம்பரிய முறைப்படி விழா நடக்கிறது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,என்றார்.
போராட்டம் தொடரும் : மதுரை: செட்டியபட்டி கிருஷ்ணன் தோட்டத்தில் பந்தல் அமைத்து தங்கியுள்ளனர். அங்கேயே சமையல் செய்து சாப்பிடுகின்றனர். தேனி மாவட்ட வருவாய்த்துறை, உசிலம்பட்டி வருவாய்த்துறை அதிகாரிகள், சமரச பேச்சு நடத்தினர். தங்களுக்கு உரிமை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.
Comments