கிரிக்கெட் விளையாடாத ஒரு வாழ்க்கையை நினைக்கவே கஷ்டமா இருக்கு: சச்சின் உருக்கமான கடிதம்

மும்பை: கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையை நினைத்து பார்க்கவே கடினமாக உள்ளது என்று சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது ஓய்வை அறிவித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஒரு கடித்ததை எழுதி அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் உள்ளவற்றை ஊடகங்களுக்கு தெரிவித்துவிடுமாறு அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் என். சீனிவாசனை கேட்டுக் கொண்டுள்ளார். அந்த கடித்தத்தில் சச்சின் கூறியிருப்பதாவது...
 
24 ஆண்டுகளாக இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று என் வாழ்நாள் முழுவதும் கனவு கண்டேன். அந்த கனவை நான் கடந்த 24 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தேன்.

கிரிக்கெட் இல்லாமல் நான் 11 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன். அதனால் இனி கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையை நினைக்கவே கடினமாக உள்ளது.

ஓய்வு சொந்த மண்ணில் 200வது டெஸ்ட் போட்டியை விளையாட ஆவலாக உள்ளேன். அந்த போட்டியோடு நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.

நன்றி... நன்றி இத்தனை ஆண்டுகளாக ஆதரித்து வரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஓய்வு பெற இது தான் நேரம் என்று மனம் கூறுகையில் அதை நான் செய்ய அனுமதிப்பதற்கும் நன்றி. என்னை புரிந்து கொண்டு பொறுமை காக்கும் எனது குடும்பத்தாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரசிகர்கள் அனைத்துக்கும் மேலாக நான் சிறப்பாக விளையாட எனக்காக பிரார்த்தனை செய்து வாழ்த்திய எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சச்சின் தெரிவித்துள்ளார்.

Comments