அந்த அளவுக்கு ஒரேயொரு பாடலில் உலக ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் அனிருத். அதையடுத்து அவர் இசையமைத்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை உள்பட பல படங்களும் ஹிட்டடித்ததால், அடுத்தபடியாக தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சிவகார்த்திகேயனின் மான்கராத்தே, இரண்டாம் உலகம் ஆகிய படங்களுக்கு இசையமைப்பவர், அதற்கடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கும் இசையமைக்கிறார்.
அது தனக்கு கிடைக்கிற மிகப்பெரிய வாய்ப்பு என்பதால், அப்படத்திலும் 3 படத்தில் தனுஷை பாட வைத்தது போல் விஜய்யை ஒரு பாடல் பாட வைத்து விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளாராம் அனிருத். அதனால் கொலவெறி பாடலுக்கு இணையாக இன்னொரு சூப்பர் ஹிட் டியூனை ரெடி பண்ணும் வேலைகளில் இப்போதே இறங்கிவிட்டாராம். அப்படி அனிருத்தின் இசையில் விஜய் பின்னணி பாடினால், சினிமாவில் அவருக்கு இது 26வது படலாகும்.
Comments