எல்லை பிரச்னை: இந்திய-சீனா புதிய எல்லை ஒப்பந்தம் கையெழுத்து

பீய்ஜிங்: பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்து வந்த இந்திய-சீனா எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது. நேற்று சீனா சென்ற பிரதமர் மன்மோகன்சிங், அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசிய பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் இந்திய-சீன எல்லையில் பதட்டம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய பயணத்தை முடித்து, பிரதமர் மன்மோகன்சிங், சீனாவுக்கு நேற்று சென்றார். பீஜிங் நகரில் அவருக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜி சின்பிங்கையும்,
அந்நாட்டு பிரதமர், லி கிகுயாங்கையும், மன்மோகன்சிங் இன்று சந்தித்து பேசினார். பிரதமருடன், தொழிலதிபர்கள் அனில் அம்பானி உள்ளிட்ட, 10 பேர் சென்றுள்ளனர்.

பல ஆணடு பிரச்னை

இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்னை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.இதுவரை 15-ம் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே இந்தியாவின் அருணாசல்பிரதேசம், காஷ்மீர் ஆகிய எல்லைப்பகுதிகளில் சீன ராணுவத்தினர் அடிக்கடி ஊடுருவி, முகாம்கள் அமைத்து தங்களது சொந்தம் என பெயர் பலகையினையும் வைத்துவிட்டு சென்றனர். இதன் மூலம் இந்தியாவிற்கு தொல்லை கொடுத்து வந்தனர். இந்த பிரச்னை குறித்து இரு நாட்டு தலைவர்களும் விரிவாக ஆலோசித்தனர்.

புதிய எல்லை ஒப்பந்தம் கையெழுத்து

இந்நிலையில் சீனா சென்றுள்ள பிரதமர், இன்று சீன பிரதமர், லி கிகுயாங்கை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் வரலற்று சிறப்புமிக்க எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய எல்லையில் சீனா தனது படைகளை குறைத்துக்கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் எல்லை பிரச்னை முடிவுக்குவந்து விட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் விசா பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை நடக்கவில்லை.தவிர இந்தியா-சீனா இடையே நிலவி வரும் நதிநீர் உள்ளிட்ட மேலும் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Comments