கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள்: ரஷ்ய பயணத்தின் போது உறுதி செய்ய பிரதமர் முடிவு

மாஸ்கோ: "கூடங்குளத்தில் கூடுதலாக, இரண்டு அணு உலைகளை அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்,'' என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங், இன்று, ரஷ்யா பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது, கூடங்குளத்தில், மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளை அமைப்பது குறித்து, அந்நாட்டு அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். ""மேற்கு வங்க மாநிலத்தின், ஹரிபூரில், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அங்கு தற்போதைக்கு அணு உலை அமைப்பதற்கான சாத்தியம்
இல்லை. இதையடுத்து, கூடங்குளத்தில் கூடுதல் அணு உலை அமைப்பது விரைவில் முடிவு செய்யப்படும்,'' என, பிரதமர் மன்மோகன்சிங், ரஷ்ய பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். ரஷ்ய பயணத்தை முடித்த பின், சீன பயணம் மேற்கொள்ள உள்ள மன்மோகன்சிங், இந்திய, சீன எல்லை பிரச்னை குறித்து அந்நாட்டு அரசிடம் பேச உள்ளார்.

Comments