
டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்து
படம் ராஜா ராணி. இப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம்
ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சிறப்பான விமர்சனம் கொடுத்ததை
அடுத்து அப்படக்குழுவினர் பத்திரிகைகளை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது, ராஜாராணி திரையிட்ட முதல் வாரத்தில் 12.2 கோடி
வசூலித்திருப்பதாக தெரிவித்தனர். இந்த ஆண்டு வெளியான படங்களில்
நான்காவது
பெரிய வசூலை இப்படம் ஈட்டியிருப்பதாக தெரிவித்தனர். அதோடு, வெளிநாட்டு
வசூலும் 8,00,000 டாலரை தாண்டுகிறதாம். இதனால் இதே நிறுவனம் முன்பு
தயாரித்த எங்கேயும் எப்போதும் அளவுக்கு இப்படமும் வசூல் சாதனை புரியும்
என்று எதிர்பார்க்கிறார்களாம்.
இந்த சந்திப்பில் ஆர்யா, இயக்குனர்
அட்லி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது
ஆர்யாவிடத்தில், உங்களுக்கு திருமணம் ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறதே?
என்று நிருபர்கள் கேட்க, இப்போதுதான் பெண்ணே பார்க்கத்
தொடங்கியிருக்கிறோம். அதற்குள் திருமணம் நடக்கயிருப்பதாக எப்படியோ
செய்தி வெளியாகி விட்டது என்றார்.
ராஜா ராணியில் காதலிக்கிற பையனை
பிரதர் என்று காதலி அழைப்பது போல் காட்சி உள்ளதே? இது சரியா என்றதற்கு,
இன்றைக்கு லவ்வரை வேறு மாதிரியெல்லாம் அழைக்கிறார்கள். அதற்கு பிரதர்
ரொம்ப பெட்டர்ன்னு நினைக்கிறேன் என்றார் ஆர்யா.
Comments