இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் மீது கமிஷனரிடம் புகார்- நஸ்ரியா அதிரடி

இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் மீது கமிஷனரிடம் புகார்- நஸ்ரியா அதிரடிசென்னை: வேறு பெண்ணின் தொப்புளோடு தன் தலையை ஒட்ட வைத்து படமெடுத்துவிட்டார் என இயக்குநர் சற்குணம் மீது புகார் கூறி வந்த நஸ்ரியா, அடுத்து இதே புகாரை சென்னை போலீஸ் கமிஷனரிடமும் இன்று பிற்பகல் தந்தார். இன்று பகல் 12 மணிக்கு கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த நஸ்ரியா, இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் மீது புகார் தந்தார்.

நய்யாண்டி படத்தில் தனுஷுடன் காதல் காட்சியில் நடித்த போது, க்ளோஸ் அப்பில் தொப்புள் தெரிகிற மாதிரி ஒரு காட்சி இருந்ததாம். ஆனால் அதில் நஸ்ரியா நடிக்க மறுத்துவிட்டாராம். உடனே வேறு பெண்ணை வைத்து தொப்புள் காட்சியை மட்டும் எடுத்துவிட்டு, அந்த உடலோடு நஸ்ரியாவின் தலையை கிராபிக்ஸில் பொருத்திவிட்டார்களாம். விஷயம் தெரிந்ததும் கொந்தளித்துவிட்ட நஸ்ரியா, இதை பெரிய விஷயமாக்கி நடிகர் சங்கத்தில் புகார் தந்துவிட்டார். அவர்களோ சமாதான முயற்சியில் இறங்க, நஸ்ரியா அதற்கெல்லாம் இறங்கி வரவில்லை. இப்போது விஷயத்தை கமிஷனர் ஆபீஸுக்குக் கொண்டு போய்விட்டார் நஸ்ரியா.

தன்னை மோசடி செய்துவிட்டதாகக் கூறி, இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் தந்தார். இன்று பிற்பகல் 12 மணிக்கு அவர் கமிஷனர் அலுவலகத்துக்கு வருவது தெரிந்ததும், ஏராளமான மீடியாக்காரர்கள் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்துவிட்டனர். புகார் கொடுத்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் தன் புகாரை விவரமாகக் கூறிவிட்டுச் சென்றார் நஸ்ரியா.

Comments