* ஏன் இந்த இடைவெளி?
கடந்த, மூன்று ஆண்டுகளாக, தமிழ் படங்களில் நடிக்கவில்லை. எனக்கு, திருப்தி அளிப்பது போன்ற படங்கள் எதுவும் அமையாதது தான், இதற்கு காரணம். இடையில் மலையாள படங்கள் கொஞ்சம் நடிச்சேன். இப்போ தமிழ்ல சில படங்கள் வந்திருக்கு ஏத்துகிட்டு நடிக்கிறேன்.
* சூதாட்டம்’ படத்தில், உங்க ரோல்?
காதல்’ படத்துக்கு பின், மீண்டும், மதுரை பொண்ணா, இந்த படத்தில் நடிக்கிறேன். பாவாடை தாவணிதான் காஸ்ட்யூம். ரொம்ப வருஷமா படிச்சிட்டே இருப்பேன், ஆனா பாஸ் ஆகமாட்டேன். பாஸ் ஆகும் வரை படிக்கணும்கிற கேரக்டர் எனக்கு, டைரக்டர் என் கேரக்டர் பற்றி சொல்லும் போதே, பயங்கர சிரிப்பு.
* ஏன் இவ்ளோ தடுமாற்றம்?
காதல்’ படத்துக்கு பின், நான் நடித்த சில படங்கள், சரியாக போகவில்லை. எனக்கும் அந்த வருத்தம் இருக்கு. கம்யூனிகேசன் கேப்பும், இதற்கு முக்கிய காரணம். யார்கிட்டயும் பேசமாட்டேன், எந்த இயக்குனர் கிட்டயும் வாய்ப்பு கேட்கமாட்டேன். எனக்கு
என்ன வாய்ப்பு வருதோ, அதைதான் பயன்படுத்துகிறேன். அதிலும், அந்த சப்ஜெக்ட் எனக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான், அந்த படம் பண்ணுவேன்.
* சந்தானம் ஜோடியாக நடித்த அனுபவம்?
சந்தானத்தை பல வருஷமா தெரியும். முன்னாடியே இரண்டு படம் அவர்கூட நடிச்சிருக்கேன். அவரோட டைமிங் காமெடி சூப்பரா இருக்கும். ஒரு டயலாக் கொடுத்தா போதும், பயங்கரமா டெவலப் பண்ணிடுவார். கூடவே சிவா, அந்த ஸ்பாட்ட கேக்கவா வேணும். நான், அந்த இடத்தில நடிக்கவே வேண்டாம், ஜஸ்ட் ரியாக்ஷ்ன் கொடுத்தாலே போதும். நான் இந்த மாதிரி, ஒரு முழு காமெடி படம் பண்ணியதில்லை.
* போட்டியை எப்படி சமாளிக்கப் போறீங்க?
என்னதான், புதுமுகமாக முதல்படம் வெற்றி கொடுத்தாலும், 100 பேரில் ஜெயிச்சி நிற்பது, நான்கு, ஐந்து பேர்தான், புதுமுகங்களுக்கு ஸ்கிரிப்ட் அமைவது சவாலான விஷயம். முதல் படம் வெற்றி கொடுத்து, இரண்டாவது படமும் ஹிட் கொடுக்கிறது, ரொம்ப கஷ்டம். நல்ல திறமைசாலியான நடிகைகள், நல்ல ஸ்கிரிப்ட் தேர்வு செய்து, நடித்தாலே, ரசிகர்களிடம், ஒரு இடத்தை பிடிச்சிடலாம்னு நம்புறேன்.
Comments