இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் சுந்தரலட்சுமி மீது நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்போவதாக சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: "தெலுங்கில் சீதாராமுல கல்யாணம் லங்கோலோ படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது இது தெலுங்கில் மட்டுமே வெளியிடப்படும் தமிழ் டப்பிங் வெளிவராது என்று சொல்லித்தான் ஒப்பந்தம் போட்டனர். ஆனால் இப்போது ஒப்பந்தத்தை மீறி தமிழ் டப்பிங் உரிமையை விற்றுள்ளனர். இதற்கு என்னிடம் முறையான அனுமதி பெறவில்லை. இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்வேன்" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் சுந்தரலட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலுங்கு தயாரிப்பாளரிடமிருந்து முறையான அனுமதி பெற்றுத்தான் தமிழில் டப் செய்திருக்கிறேன். ஹன்சிகாவின் புகார் குறித்து தெலுங்கு தயாரிப்பாளரிடம் கேட்டபோது மற்ற மொழிகளில் டப் செய்ய மாட்டோம் என்று ஹன்சிகாவுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. வாய்மொழியாகவும் அவர் கேட்கவில்லை. நாங்களும் சொல்லவில்லை. என்று கூறிவிட்டார் எனவே ஹன்சிகா எந்த நடவடிக்கை எடுத்தாலும் அவர் தெலுங்கு தயாரிப்பாளர் மீதுதான் எடுக்க வேண்டுமே தவிர எங்கள் மீதல்ல. அதையும் மீறி அவர் எங்களுக்கு இடையூறு செய்தால் அவரை சட்டப்படி சந்திப்போம் எங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் அவரே ஈடுகட்ட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ஹன்சிகா எதிர்ப்பது ஏன்...?
படத்தின் டப்பிங் பொறுப்பேற்றிருக்கும் ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறும்போது "ரவுடிக்கோட்டை படத்தில் ஹன்சிகா படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அதனால் தமிழ் நாட்டில் தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என்று பயந்து படத்தை தடை செய்ய முயற்சிக்கிறார்" என்றார்.
Comments