மும்பை: மும்பையில் உள்ள கோரை பீச் பகுதியில் இளம்பெண்ணை வாயில் ஆசிட்
ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசில்
புகார் தெரிவித்ததால் இது போன்ற இளைஞன் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜிதேந்திரா சக்பால் (20)
என்பவன் இப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை ஒருதலைக்காதல் செய்துள்ளான்.
ஆனால் இந்த பெண் மறுத்து விட்டார். இது குறித்து பெற்றோர்கள் மூலம்
போலீசில் புகார் தெரிவித்துள்ளார். ஜிதேந்திராவை போலீசார் எச்சரித்து
அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கோரை பீச் பகுதியில் வந்த இந்த பெண்ணின் வாயில் ஆசிட்டை ஊற்றி,
கடலுக்குள் தள்ளி விட்டார். இதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து
ஜிதேந்திராவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட இளம் பெண்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வாலிபன் மீது கொலை முயற்சி
வழக்குப்பதியப்பட்டுள்ளதாக, மும்பை துணை கமிஷனர் மகேஷ் பாட்டீல்
தெரிவித்துள்ளார். இவர் மேலும் கூறுகையில்; சம்பவம் நடந்திருப்பது
உண்மைதான். ஆனால் அந்தபெண் தானாக ஆசிட் குடித்ததாக கூறினான். முதற்கட்ட
விசாரணையின்படி இவன் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது என்றார்.
Comments