இந்த தீர்ப்பை அடுத்து லாலு எதிர்காலத்தில் அரசியல் வாழ்வில் ஈடுபட முடியாது. சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் படி மக்கள் பிரதிநிதிகள் 2 ஆண்டுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றால் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், ஏற்கனவே வகித்து வரும் பதவியும் இழப்பு செய்ய நேரிடும் என்ற தீர்ப்பு லாலுவுக்கு பொருந்தும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேட்டில் சிக்கிய காங்., எம்.பி.,க்கு டில்லி கோர்ட் 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதனையடுத்து குற்ற பின்னணி , தண்டனை பெற்றவர்கள் பதவி இழப்பதில் லாலு 2 வது நபர் என்ற இடத்தை பிடித்தார். கடந்த 1990 முதல் நடந்த ஊழல் மத்திய கணக்காயம் மூலம் வெளி உலகிற்கு வந்தது. பின்னர் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரித்து ஆதாரங்கள் திரட்டியது. மொத்தம் பல பிரிவுகளாக நடந்த ஊழலில் 950 கோடி ஸ்வாகா செய்யப்பட்டது. இதில் லாலுவுக்கு 37.75 கோடி ஊழல் பங்கு. இந்த வழக்கில் ராஞ்சி கோர்ட் இன்று மதியம் நீதிபதி பர்வேஸ் குமார் தீர்ப்பு வழங்கினார். வீடியோ கான்பரன்ஸ் மூலம்: முன்னாள் முதல்வர்கள் ஜெகன்னாத் மிஸ்ரா, லாலு பிரசாத்யாதவ், மாஜி அமைச்சர் பிரித்மிஸ்ரா உள்ளிட்ட 45 பேர் குற்றவாளிகள் என கடந்த 30 ம் தேதி கோர்ட் அறிவித்தது, இதனையடுத்து ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனையை நீதிபதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் குற்றவாளிகளிடம் தெரிவித்தார். இதற்கென லாலு ஜெயிலில் உள்ள கோர்ட் அறைக்கு வந்தார்.ஜெயிலில் இருந்த லாலு தண்டனையை கேட்டதும் அதிர்ச்சியுற்ற நிலையில் இருந்ததாக ஜெயில் வட்டாரம் தெரிவிக்கிறது. பிர்சா முண்டா சிறையில் 3312 எண் என்ற சிறையில் லாலு அடைக்கப்பட்டுள்ளார்.நாங்கள் கட்சியை நடத்துவோம்: லாலுவுக்கு சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டதை அடுத்து லாலு மகன் தேஜாஸ்வி கூறுகையில்: எங்க அப்பா ஜெயிலுக்கு போனாலும் கட்சியை, நானும் , எனது அம்மாவும் (ரப்ரிதேவி) இணைந்து சோனியா- ராகுல் காங்கிரஸ் கட்சியைநடத்துவது போல் நடத்துவோம் என்றார். இவரது கட்சி நிர்வாகிகள் கூறுகையில்: லாலு மீது சுமத்தப்பட்ட தண்டனைக்கு பா.ஜ., காங்கிரஸ், ஐக்கியஜனதாதளம் ஆகிய கட்சிகளே காரணம் என்றனர். * 1994- 95 காலக்கட்டத்தில் மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்தது. * 1996 ல் ஊழல் வழக்கில் லாலுவுக்கு எதிராக சி.பி.,ஐ குற்றச்சாட்டை பதிவு செய்தது. * கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் 1997 ஜூலை 25 ம் தேதி லாலு முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இந்த பொறுப்பை அவரது மனைவி ரப்ரிதேவி ஏற்று ஆட்சியை நடத்தினார்.
கருணை காட்டலாமா ? *முன்னாள் மத்திய அமைச்சர் என்ற முறையிலும், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டும், லாலுவுக்கு கருணை அடிப்படையில் குறைந்த பட்ச வழங்க வேண்டும் என லாலு வக்கீல் நீதிபதியிடம் கோரினார். ஆனால் நீதிபதி நிராகரித்துவிட்டார். குற்றவாளிகள் பெயர் விவரம் வருமாறு: லாலுபிரசாத்யாதவ், முன்னாள் முதல்வர் ஜெகன்னாந் மிஸ்ரா, மாஜி அமைச்சர் பிரித்மிஸ்ரா, மற்றும் அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் விவரம் வருமாறு: மகேந்திரபிரசாத், அருண்கவுதம், ஜெகதீஷ்சர்மா, ஆர்,கே.ரானாஜி, அஜீத்குமார்பர்னாகா, ரவிக்குமார்,மோகன்பிரசாத், சுதீஷ்குமார், முகம்மது சையீது கோ, முகம்மது உசேன், விஜய்குமார், மகேந்திரசிங், ஹரீஸ், ராஜன்மேத்தா, அஜய்குமார்ஷீனா, கௌரிசிங்கர் பிரசாத், சஞ்சய்குமார், செகந்திரகுமார், ரவீந்திரகுமார், தயானந்த், மகேந்திர பிரசாத் உள்ளிட் 45 பேருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரவர் பங்கிற்கு ஏற்ப சிறைத்தண்டனை மாறுபடுகிறது.ஏழைகளின் குரல் நெறிப்பு: லாலு கட்சி சொல்கிறது ; தீர்ப்பு வெளியானதும் லாலு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரகுவன்ஸ் பிரசாத் கூறுகையில்: இந்த தீர்ப்புக்கு பின்னால் அரசியல் கட்சிகளின் சதி உள்ளது. இந்த சதியை மக்களிடம் படம் போட்டு காட்டுவோம். ஏழை சமுதாயத்திற்கு உழைத்த தலைவர் லாலுவுக்கு சிறை விதித்திருப்பதன் மூலம் ஏழைகள் குரல் நெறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நிர்வாகியான ராம்கிர்பால் யாதவ் கூறுகையில் ; ஏழைகளுக்கு யாரெல்லாம் உழைக்கின்றனரோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றர். லாலுவின் வக்கீல் கூறுகையில் இந்த தண்டனை மிக அதிகப்பட்சமானது என்றார். சட்டம் தன் கடமையை செய்துள்ளது என காங்கிரஸ் கருத்து வெளியிட்டுள்ளது.
Comments