ரெடியாகிறது ஆரம்பம் தீம் மியூசிக்!

Yuvan making Theme music for Arrambamஅஜீத்தின் ஆரம்பம் வருகிற 31ந் தேதி தல ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ரிலீசாகிறது. படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ரிலீசாகி ஹிட்டாகி உள்ளது. ஆனால் பாடல் ஆல்பத்தில் தீம் மியூசிக் இடம் பெறவில்லை. அஜீத் இதற்கு முன் நடித்த பில்லா, மங்காத்தா படங்களின் தீம் மியூசிக் படத்தின் ஆல்பத்திலேயே இடம் பெற்றிருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் தீம் மியூசிக் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அதனால் தற்போது தீம் மியூசிக்கை உருவாக்கும் பணியில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனும் தீவரமாக ஈடுபட்டுள்ளனர்.


இதுகுறித்து விஷ்ணுவர்த்தன் கூறியிருப்பதாவது: "தீம் மியூசிக் என்பது படத்தின் கதைக்கு ஏற்ப ரீரிக்கார்டிங் பண்ணும்போது உருவாவது. அதனால் ஆல்பத்தில் தீம் மியூசிக் இடம்பெறவில்லை. இப்போது யுவன் ரீரிக்கார்டிங் பணியில் பிசியாக இருக்கிறார். தீம் மியூசிக்கை வெளியிடுவது பற்றி அவருடன் ஆலோசித்து வருகிறேன். விரைவில் எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு தீம் மியூசிக்கை வெளியிடுவோம்" என்றார்.

Comments