இந்து அமைப்புகளைச் சேர்ந்தவகளை கொன்று குவித்த, "போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள், கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பக்ருதீனின் டைரியில் இருந்து, பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன.
இவர்களிடம் உள்ள மொபைலில் இருந்த பக்ருதீன் எண்ணில், இவர்களை வைத்தே, போலீசார் பேச வைத்தனர். 6 லட்ச ரூபாய் கொடுக்கிறோம்; ஒரு பிரமுகரை கொலை செய்ய வேண்டும் என, பேசினர்.அதை உண்மை என நம்பிய பக்ரூதீன், காட்பாடிக்கு வந்தார். அப்போது போலீசாரை பார்த்ததால் தப்பியோடினார்; போலீசாரும் துரத்தினர். கடைசியில் சென்னையில் கைதானார். பக்ருதீன் பிடிபடக் காரணமாக இருந்த, எட்டு பேரை, பக்ருதீன் முன்னிலையில் விசாரணை நடத்திய போது, "இப்படி செய்து விட்டீர்களே?' என, பக்ருதீன் எரிந்து விழுந்துள்ளார்.
"அப்ரூவர்' பக்ருதீன்:
தொடர்ந்து, வேலூரில் வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோர் கொலை
செய்யப்பட்ட இடங்களுக்கு, போலீசார், பக்ருதீனை அழைத்துச் சென்றனர். கொலை
நடந்த இடத்தை சரியாக அடையாளம் காட்டிய பக்ருதீன், கொலை சம்பவத்தையும்
நடித்துக் காட்டினார்.இது தவிர, "போலீஸ்' பக்ருதீன் அப்ரூவராக மாற
விருப்பம் தெரிவித்துள்ளார். நடந்த கொலைகளை ஒன்று விடாமல் விசாரணையில்
எழுத்துப் பூர்வமாக கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
.
.
ஆந்திரா போலீஸ் விசாரணை:
கடந்த,
2011ல், சித்தூர் காங்., எம்.எல்.ஏ., பாபு, காரில் வரும் போது,
பாலத்துக்கு அடியில் வெடிகுண்டு வைத்து, கொலை செய்ய முயற்சி நடந்தது. இந்த
வழக்கில், 23 பேர் படுகாயமடைந்தனர்.போலீசார், 18 பேரை கைது செய்தனர்; 11
பேர் தலைமறைவாகி விட்டனர். படுகாயடைந்த எம்.எல்.ஏ., பாபு, வேலூர் தனியார்
மருத்துவமனையில், 20 நாள் சிகிச்சை பெற்றார். இதில், பக்ருதீன் கும்பல்
சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது.அப்போது, போலீசார் பெரிதாக
எடுத்துக் கொள்ளவில்லை. புத்தூரில் இவர்கள் பிடிபட்ட பிறகு, இவர்கள் இதில்
சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், இவர்களிடம் விசாரணை செய்தோம்.
போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருக்கிறோம் என, ஆந்திரா
போலீசார் தெரிவித்தனர்.அந்த வகையில், ஆந்திர மாநில நக்சலைட் ஒழிப்பு
சிறப்பு போலீஸ் டி.எஸ்.பி., வெங்கடேஸ்வரா, பக்ருதீனிடம் இது தொடர்பாக
விசாரணை நடத்தினார்.
மோடிக்கு பயங்கரவாதிகள் குறியா?
''தமிழகத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு, பயங்கரவாதிகள் குறி வைத்தனரா என்பது குறித்து, தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது,'' என, சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
"போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்டோர் கைது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது: தமிழகத்தில், இந்து அமைப்புகளின் முக்கிய தலைவர்கள், கொலை வழக்கு குறித்த விசாரணையில், "போலீஸ்' பக்ருதீன் கைது செய்யப்பட்டு, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், புத்தூரில் உள்ள வீட்டில், அதிரடி சோதனை நடத்தினோம். பல மணி நேர போராட்டத்திற்கு பின், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை, கைது செய்தோம். துப்பாக்கி சண்டையில் குண்டு காயம் அடைந்த, பன்னா இஸ்மாயிலுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படும்."போலீஸ்' பக்ருதீனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அபுபக்கரை பிடிக்க, தனிப்படை அமைத்து, தீவிரமாக தேடி வருகிறோம். அவர் பிடிபட்டால் இந்த வழக்கு விசாரணை தீவிரமடையும்.இவ்வாறு, அவர் கூறினார்.
அப்போது, "நரேந்திர மோடியின் தமிழக வருகையின் போது, சதிதிட்டம் தீட்டப்பட்டதா?' என, நிருபர்கள் கேட்டதற்கு, ""தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்,'' என, பதிலளித்தார். மேலும், இந்த வழக்கு குறித்த பல கேள்விகளுக்கு, ""விசாரணை நடத்தி வருகிறோம்,'' என்றே பதிலளித்தார்.
Comments