நரேந்திர மோடி வாழ்க்கை ரூ 40 கோடி செலவில் சினிமாவாகிறது!

நரேந்திர மோடி வாழ்க்கை ரூ 40 கோடி செலவில் சினிமாவாகிறது!  டெல்லி: குஜராத் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ரூ 40 கோடி செலவில் திரைப்படமாகிறது. இந்தப் படத்தில் நரேந்திர மோடி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அவரே. சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரேஷ் ராவல் இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஓ மை காட்' என்ற படத்தை தயாரித்தவர். சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'சர்தார்' என்ற படத்திலும் நடித்தவர். பரேஷ் ராவல் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் என்பதும், குஜராத்தில் நடந்த சென்ற சட்டப்பேரவை தேர்தலில் மோடிக்காக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றியவர் என்பதும் நினைவிருக்கலாம். சமீபத்தில் மோடியைச் சந்தித்த பரேஷ் ராவல், இந்த திரைப்பட தயாரிப்பு குறித்து அவரிடம் விரிவாகப் பேசினார்.

Comments