கூடியது தமிழக சட்டபை: 30-ம் தேதி வரை நடத்திட ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு

சென்னை; தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர், இன்று காலை 10:00 மணிக்கு சபாநாயகர் தனபால் தலைமையில் துவங்கியது. மொத்தம் 6 நாட்கள் இக்கூட்டத்தொடரை நடத்திட அலுவல் ஆய்வுக்குழ முடிவு செய்துள்ளது. இன்று காலை கூட்டம் துவங்கியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் 2 நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.


முதல் நாள் கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. ,. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். சபை உரிமைக்குழுவால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுடன், அக்கட்சியின் மற்ற எம்.எல்.ஏ.,க்களும் கலந்து கொண்டனர். 10 நிமிடம் மட்டுமே கூடிய இக்கூட்டம் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது.

30ம் தேதி வரை நடக்கிறது

இதையடுத்து, சபை வளாகத்தில் சட்டசபை அலுவல் ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் தலைமையில் கூடியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு
மொத்தம் 6 நாட்கள் சட்டசபை கூடும், வரும் 25-ம் தேதி துணை நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதன் மீது 28, 2 9-ம்தேதிகளில் விவாதம் நடக்கும்.பின்னர் 30-ம் தேதி விவாதத்திற்கு பதில் அளித்து பன்னீர்செல்வம் உரையாற்றுவார். இதையடுத்து வாக்கெடுப்பு நடக்கும். இவ்வாறு அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Comments