பாரிஸ்: உலக மக்கள் தொகை பற்றிய புதிய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
இதில், 2050ல், மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், சீனாவை
பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடம் பிடிக்கும் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த,
ஆய்வாளர்கள், உலக மக்கள் தொகை பற்றி ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல்
செய்துள்ளனர். இந்த அறிக்கையின்படி, தற்போது, உலகின் மொத்த மக்கள் தொகை,
710 கோடி ஆக உள்ளது. வேகமாக அதிகரித்து வரும், மக்கள் தொகை பெருக்கத்தால்,
2050ல், இந்த எண்ணிக்கை, 970 கோடியாக உயரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போது, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில், சீனா
முதலிடம் பிடித்துள்ளது. சீனாவின் மக்கள் தொகை, 130 கோடியாக உள்ளது.
இப்பட்டியலில், 120 கோடி மக்கள் தொகையுடன், இந்தியா இரண்டாவது இடத்தில்
உள்ளது. அமெரிக்காவின் மக்கள் தொகை, 31 கோடியாகவும், இந்தோனேசியாவின்
மக்கள் தொகை, 25 கோடியாகவும் உள்ளன. அதிகரித்து வரும் மக்கள் தொகை
பெருக்கத்தால், 2050ல் உலக மக்கள் தொகையின் அளவு, 970 கோடியாக உயரும்.
அப்போது, சீனாவின் மக்கள் தொகையை விட, இந்தியாவின் மக்கள் தொகை அதிகம்
உயர்ந்து, 160 கோடியாக பதிவாகும். இதன் மூலம், 2050ல், இந்தியா, உலக மக்கள்
தொகையில் முதலிடம் பிடிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments