தொடரும் மழை.. ராஜ்கோட்டில் இந்தியா- ஆஸி. 20 ஓவர் போட்டி நாளை நடைபெறுமா?

தொடரும் மழை.. ராஜ்கோட்டில் இந்தியா- ஆஸி. 20 ஓவர் போட்டி நாளை நடைபெறுமா?ராஜ்கோட்: இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 20 ஓவர் போட்டி நாளை குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ஆனால் அங்கு மழை தொடரும் அறிவிக்கப்பட்டிருப்பதால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக இவ்விரு அணிகளும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் ராஜ்கோட்டில் நாளை சந்திக்கிறது. இந்திய அணியின் 7 வீரர்கள் ராஜ்கோட்டில் முகாமிட்டுள்ளனர். இன்று இரவு டோணி உள்ளிட்டோர் ராஜ்கோட் சென்றடைய உள்ளனர். ஆஸ்திரேலியா அணி மும்பையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை நடைபெற உள்ள இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 20 ஓவர் போட்டி மழையால் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் அங்கு பலத்த மழை பெய்தது. அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Comments