
ஆமதாபாத்:'தொடர்ச்சியாக, 12 ஆண்டுகள், குஜராத் முதல்வராக பதவி வகித்தவர்'
என்ற பெருமையை, நரேந்திர மோடி நேற்று பெற்றுள்ளார். 'நரேந்திர மோடியின்
சிறப்பான நிர்வாகத்தால், குஜராத், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில்,
நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது' என, அம்மாநில செய்தித் துறை
தெரிவித்துள்ளது.
குஜராத் முதல்வராக இருந்த, பா.ஜ., மூத்த தலைவர்,
கேசுபாய் படேல், 2001ல், பதவி விலகினார். இதையடுத்து, நரேந்திர மோடி,
குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார். அன்றிலிருந்து, இப்போது வரை, அவர் தான்,
முதல்வராக பதவி வகித்து வருகிறார்.குஜராத் முதல்வராக நரேந்திர மோடி
பதவியேற்று, நேற்றுடன், 12 ஆண்டுகள் முடிந்து விட்டன. இதையடுத்து, குஜராத்
முதல்வராக, தொடர்ச்சியாக, 12 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தவர் என்ற
பெருமை, அவருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன், குஜராத்தில், யாரும்,
தொடர்ந்து, 12 ஆண்டுகளாக பதவி வகித்தது இல்லை.
இது தொடர்பாக, குஜராத் மாநில செய்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:நரேந்திர
மோடியின் சிறப்பான நிர்வாகத்தால், 12 ஆண்டுகளில், மாநிலம், சிறப்பான
வளர்ச்சியை பெற்றுள்ளது. வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில், நாட்டின்,
முதன்மை மாநிலமாக விளங்குகிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக
திகழ்கிறது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments