உடலை காட்டி நடித்து வளர விரும்பவில்லை - நித்யா மேனன்!!

I cant develope by exposing glamour says Nithya Menon
180, வெப்பம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை நித்யா மேனன். கேரளத்து வரவான இவர் தற்போது ஜே.கே. எனும் நண்பனின் காதலி எனும் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர இன்னும் சில தமிழ் படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் அளித்த பேட்டி இதோ...

* எந்த மாதிரி கேரக்டர்களில் நடிக்க ஆசை?

இதுவரை மென்மையான கேரக்டர்களில் தான் நடித்து வந்தேன். தற்போது, நடித்து வரும், தமிழ் படத்தில், ஆக் ஷன் அவதாரம் எடுத்துள்ளேன். 
இனி, எந்த மாதிரி வேடத்துக்கும் பொருத்தமான நடிகையாக இருக்க வேண்டும் என, ஆசைப்படுகிறேன்.

* ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறதே?

உண்மை தான். டைரக்டர்கள் சொல்லும் முழுக்கதையையும் கேட்டு, அதில், எனக்குரிய வேடத்தின் முக்கியத்துவத்தை மட்டுமே கேட்பேன். மற்றபடி, ஹீரோ யார்? அவருக்கு எந்த மாதிரி ரோல் என்று நான் ஆராய்வதில்லை. அது, எனக்கு தேவையில்லாத விஷயம்.

* முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் போது தானே, உங்களது சம்பளம் உயரும்?

சம்பளத்தை விட, நான் நடிக்கிற கதையும், அதில், நான் நடிக்கிற கேரக்டரும் தான் முக்கியம். அது, திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், சம்பள விஷயத்தில், நான் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

* வாங்குற சம்பளத்தை விட, அதிகமாக நடிக்கிறீர்களாமே?

இயக்குனர்கள், 50 சதவீதம் என்றால், நடிப்பவர்களும், 50 சதவீதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். அதனால், டைரக்டர்கள்  சொல்வதை கேட்டு, அப்படியே நடிக்காமல், அந்த காட்சியில், இன்னும் எந்த அளவுக்கு நன்றாக நடிக்கலாம் என்று, நானும் யோசித்து நடிப்பேன்.  இதனால், பல டைரக்டர்களிடம் பாராட்டு பெற்றிருக்கிறேன்.

* தெலுங்கில் நடிகைகளை கவர்ச்சி பொம்மைகளாக சித்தரிப்பார்களே? நீங்கள் எப்படி?

தெலுங்கிலும், தமிழ், மலையாளத்தில் நடிப்பது போன்று, கிளாமர் இல்லாத வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன். உடலை காட்டி நடித்து வளர்வதை விட, நடிப்பைக் காட்டி வளருவதையே நான் விரும்புகிறேன்.

* நிஜத்தில் நித்யா எந்த மாதிரி பெண்?

ரொம்ப அடக்கமான, அமைதியான பெண். வெற்றியை கண்டு ஆடவும் மாட்டேன். தோல்வியை கண்டு சோர்ந்து போகவும் மாட்டேன். எப்போதும் ஒரே மனநிலையுடன் இருப்பேன்.

Comments