மிகச்சிறந்த இந்திய பிரபலங்களில் முதலிடம் பிடித்த ரஜினி!

Rajinikanth the top most indian Celebrityகடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்கள் யார்? என்று ஒரு நிறுவனம் இணையதளம் மூலம் ஓட்டெடுப்பு நடத்தியது. அந்த பட்டியலில் அப்துல்கலாம், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கபில்தேவ், ரத்தன் டாடா, ஏ.ஆர்.ரகுமான், டெண்டுல்கள், ஷாரூக்கான், டோனி என அரசியலுக்கு அப்பாற்பட்ட விஐபிக்களின் பெயர் இடம்பெற்றிருந்ததாம்.

ஆன்லைனில் பொதுமக்கள் தினம் தினம் ஓட்டளித்து வந்தனர். அதையடுத்து ஓட்டுகள் எண்ணப்பட்டது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் 7.3 சதவிகிதம் ஓட்டுகுகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளாராம். அவரையடுத்து இரண்டாம் இடத்தை டெண்டுல்கரும், 3வது இடத்தை அப்துல்கலாமும், 4வது இடத்தை ஏ.ஆர்.ரகுமானும் பிடித்துள்ளார்களாம்.

இந்தப்போட்டியில் இந்தி சினிமாவின் முக்கிய நடிகரான அமிதாப்பச்சனுக்கு 10வது இடமும், ஷாரூக்கானுக்கு 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்களாம்.

Comments