சிம்லா ஒப்பந்தப்படியே பேச்சு:
ஐநா., பொதுச்சபையின் 68-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாறறிய மன்மோகன் சிங், ஐ.நா., பொதுச்சபையை சீரமைக்க வேண்டும். வளர்ந்த நாடுகளை ஐ.நா., பொதுச்சபையில் உறுப்பினராக்க வேண்டும். பொருளாதார மந்த சூழ்நிலை வளர்ந்து வரும் நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. பாதுகாப்புக்கும் நீடித்த நிலையான தன்மைக்கும் பயங்கர வாதம் தடையாக உள்ளது. பாதுகாப்பு சபையில் வளர்ந்த நாடுகளுக்கு இடமளிக்க வேண்டும். பாதுகாப்பு சபையை விரிவுபடுத்தும் வகையி்ல் சீர்திருத்தம் அவசியம். வறுமையை ஒழிப்பதற்கு நேரடியான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். ஒருங்கிணைந்த வளர்ச்சியே அனைத்து நாடுகளுக்கும் அவசியம் ஏழ்மையை ஒழிக்க உலக நாடுகள் புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். . பெண்கள் முழுமையான ஊட்டச்சத்து பெறுவது உறுதி செய்வது அவசியம் .ஆப்ரிக்க நாடுகளின் ஏழ்மையை போக்குவதற்கு வளர்ந்த நாடுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது என வலியுறுத்தினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின்ஒருங்கிணைந்த பகுதி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியாவுக்க எதிராக நடைபெறும் பயங்கரவாத தாக்குல்களை பொறுத்து கொள்ள முடியாது. அதே நேரத்தில் பயங்கரவாதிகளின் புகழிடமாக பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தான் தன்னுடைய நாட்டில் உள் ள பயங்கரவாத கட்டமைப்பை ஒழிக்க வேண்டும்.பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்னைகளையும பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புகிறது. பயங்கரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி, நிதியுதவி அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நவாஸ் ஷெரீப்புடனான சந்திப்பு குறித்து ஆர்வமாக உள்ளேன். சிம்லா ஒப்பந்தப்படியே காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.இந்தியாவுக்கு எதிரான தாக்குதலை சகித்து கொண்டிருக்க முடியாது. அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச அளவில் ஒரு மித்த கருத்து எட்டப்பட வேண்டும் என கூறினார். சிரியாவின் பிரச்னைக்கு அரசியல் முறை மூலமாகவே தீர்வு காணப்பட வேண்டும் . என கூறினார்.
Comments