இரவு 8 மணிக்கு மேல் பெட்ரோல், டீசல் கிடைக்காது !

புதுடில்லி: பெட்ரோல், டீசல் பங்க்குகளை இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை மூடலாம் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளதாக மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் ரேஷன் முறை வருமா என கேள்வி எழுந்துள்ளது. மத்திய அமைச்சரின் கருத்துக்கு பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பெட்ரோல் பங்க்குகளை மூடுவது பற்றி சிந்திப்பதற்கு முன்னர் பொருளாதாரத்தை மீட்பது பற்றி சிந்திக்க வேண்டும். இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். பொருளாதாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு பெட்ரோல் டீசலுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது.

Comments