தூத்துக்குடி: தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 7பேரை
போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 309 மதுபாட்டில்கள் மற்றும்
ரூ.900 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி பூமார்க்கெட், ஜெயராஜ் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுவிற்பனை செய்த முள்ளக்காடு காந்தி நகரைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் பவன்குமார்(35). குரூஸ்புரம் வின்சென்ட் மகன் கிளாஸ்டன்(44) ஆகிய இருவரையும் மத்திய பாகம் போலீசார் கைது செய்தனர். பழைய இரும்பு கடை டாஸ்மாக் பாரில் மதுவிற்பனை செய்த ஜார்ஜ் ரோடு பி.வி.ஆர்.புரம் ராஜா மகன் மாடசாமி(39), பூபாலராயபுரம் மெயின்ரோடு டாஸ்மாக் பாரில் மதுவிற்பனை செய்த தாமோதர நகர் சேகர்(43), அமெரிக்கன் ஆஸ்பத்திரி ஜங்ஷனில் உள்ள பாரில் மதுவிற்பனை செய்த முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(52) ஆகியோர்களை வடபாகம் போலீசார் கைது செய்தனர்.
Comments