15 கிலோ எடை ஆராய்ச்சி கருவிகள்:இந்த விண்கலத்தில் 15 கிலோ எடை கொண்ட 5 ஆராய்ச்சிக் கருவிகள் இடம்பெற்றிருக்கும். செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கானச் சான்றுகள், சுற்றுச்சூழல், பரப்பு, தட்பவெப்பம் ஆகியவற்றைப் படம் பிடிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ரூ.450 கோடி செலவு:ரூ.450 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக இஸ்ரோ முன்னாள் தலைவர் யூ.ஆர்.ராவ், விண்வெளி அறிஞர் ரோத்தம் நரசிம்மா உள்ளிட்டோர் அடங்கிய தேசிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. பெங்களூர் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த விண்கலம், முழுமையானச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.பின்னர் விண்வெளியில் 10 மாதங்கள் பயணம் செய்த பிறகு, 2014, செப்டம்பரில் செவ்வாய்க் கிரக சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.இது வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டால் இதுவும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.
Comments