பெங்களூரூ: பா.ஜ.வில் இருந்து பிரி்ந்து சென்று,கர்நாடகா ஜனதா கட்சியை
துவக்கிய, அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மீண்டும் பா.ஜ.விற்கு
திரும்ப உள்ளார். பா.ஜ. வட்டாரங்கள் கூறுகையில், கடந்த வெள்ளியன்று
பா.ஜ.பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில், மோடி பிரதமர் வேட்பாளராக
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதற்கு முன்னதாகவே எடியூரப்பா , மோடியை
சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும்,இதையடுத்து பா.ஜ. வில் மீண்டும்
எடியூரப்பா இணைய உள்ளதாகவும், வரும் 18-ம் தேதி, மூத்த தலைவர்களை
சந்தித்து பா.ஜ.வில் எடியூரப்பா ஐக்கியமாக உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள்
கூறுகின்றன.
Comments