செளராஷ்டிரா...
இந்த மொழி அழிவுப் பட்டியலில் தஞ்சாவூர் மராத்தி, செளராஷ்டிரா,
பெட்டகுரும்பா, எரவுல்லா, இருளா, காடர், கல்ராயன், மலையாளி, கனிகாரன்,
காட்டுநாயக்கா, கொலிமலா, கோட்டா, முடுவா, முல்லுகுரும்பா, பச்சமலை மலையாளி,
பலுகுரும்பா, தோடா, உரளி, வாக்ரி போலி, வலியான் ஆகிய மொழிகள் அழியும் நிலை
ஏற்பட்டுள்ளதாம்.
பேசுறது புரியும்.. ஆனா பேசத் தெரியாது
இந்த பாஷை பேசுவோரின் புதிய தலைமைக் குழந்தைகளுக்கு தங்களது குடும்பத்தினர்
என்ன பேசுகிறார்கள் என்பது மட்டுமே புரிகிறதாம். மாறாக, இவர்களால் அந்த
பாஷையை சரளமாக பேச முடிவதில்லையாம். காரணம் ஆங்கிலத்தின் தாக்கம்.
திருடர்கள்.. அரவாணிகளுக்குத் தனி மொழி
திருடர்கள், அரவாணிகள் பேசும்மொழி தனியாக மாறி வருகிறதாம். இது உள்பட
பல்வேறு மொழிகள் குறித்த விவரங்களை இந்த அமைப்பு ஆவணமாக்கி வருகிறதாம். 50
தொகுப்புகளைக் கொண்ட இந்த ஆவணத்தை செப்டம்பர் 5ம் தேதி இந்த அமைப்பு
வெளியிடவுள்ளது.
நாங்கெல்லாம் ஜப்பான்காரங்க..
இந்தியாவில் பலரும் வெளிநாட்டு பாஷைகள் மீது மோகம் கொண்டவர்களாக உள்ளனர்.
குறிப்பாக ஜப்பான், இத்தாலி போன்ற பாஷைகளை கற்றுக் கொண்டு தங்களது
தாய்மொழியே அதுதான் என்பது போல நடந்து கொள்வோர் அதிகரித்துள்ளனராம்.
சைன் மொழி...
அதேபோல சைன் மொழியையும் இந்த அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது. இதுகுறித்து
அந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் தவி கூறுகையில் சைன் மொழியும் கூட ஒரு
வகையில் மொழிதான். அதையும் ஆவணப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.
அரவாணிகளின் தனிமொழி
அதேபோலஅரவாணிகள் பேசும் பாஷையையும் தனி மொழியாக கருதி இவர்கள்
ஆவணப்படுத்தியுள்ளனர். அரவாணிகள், ஒரு காலத்தில் மன்னர்களின்
பாதுகாவலர்களாக இருந்தவர்கள். பின்னர் இவர்களின் நிலை மோசமாகி இன்று படு
கேவலமாகிப் போயுள்ளது. இவர்களின் பாஷைக்கும் தனி வரலாறு உண்டு என்றார் தவி.
780 மொழிகள் குறித்து ஆய்வு
இந்த ஆய்வுக்காக 780 மொழிகளையும், 66 எழுத்து வடிவங்களையும் ஆராய்ந்துள்ளனர்.
திருடர்களின் நர்ஸி பார்சி....
இந்தியாவில் உள்ள திருடர்கள் பேசும் மொழி குறித்தும் ஒரு வித்தியாசமான
ஆய்வை இந்த அமைப்பு நடத்தியுள்ளது. அதாவது நர்ஸி பார்சி என்ற வித்தியாசமான
மொழியை அவர்கள் பேசுகின்றனராம். திருடப் போகும்போது இந்த பாஷையில் அவர்கள்
பேசிக் கொள்கிறார்களாம்.
Comments