ஆனால் அதற்காக இதுதான் காதல் என்பதை ஏற்க முடியாது. இப்படியும்
காதலிக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்ல முடியுமே தவிர, காதலித்தாலே
இதுதான் கதி என்ற பொதுக் கருத்தை இந்தப் படம் உருவாக்கும்
ஆபத்துமிருக்கிறது.
உண்மையான காதல், எதிர்ப்பார்ப்புகள் அற்றது, உடல் சுகம் பார்த்ததும்
அலுத்துப் போகாதது, பெற்றோர்களின் பேரங்களை எதிர்ப்பார்க்காதது,
எதற்காகவும் காத்திருக்காதது. காதலின் எதிர் விளைவுகளைச் சொன்ன சுசீந்திரன்
இதையும் கொஞ்சம் மனசில் தைக்கும்படி பதிவு செய்திருக்கலாம்.
காதலின் பெயரில் காதலுக்கு எதிராக வந்திருக்கிற படம்தான்.... ஆனால் இதையும் பார்ப்பீர் காதலர்களே!
Comments