இந்தியாவில் லஷ்கர் பயங்கரவாதிகள் ; தாக்குதல் நடத்தும் அபாயம் : எச்சரிக்கை

புதுடில்லி: இந்தியாவில் குறிப்பாக டில்லியில் மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதலை நடத்த பயங்கரவாத அமைப்புக்கள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து டில்லி போலீசார் உஷாராக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்
ளனர்.

இது குறித்து உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், டில்லி நகரில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்திட சதி போடப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக
அறிவிக்கப்பட்டுள்ள ஜமாஉத்தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையீது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளிடம் தாக்குதல் நடத்த கோரியுள்ளார். இதன்படி முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் சுதந்திரதினம் மற்றும் பார்லி., கூட்டத் தொடர் ஆகியவற்றை சீர்குலைக்க இந்த தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதனால் டில்லி போலீசார் முழு அலார்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்கள் கண்காணிக்கப்படுகிறது.


ஹபீஸ் சையீது தலைமையில் தொழுகை: ஹபீஸ் சையீது என்பவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர். இவர் பாகிஸ்தானில் அவ்வப்போது முக்கிய நிகழ்ச்சிகளில் உரையாற்றுவார். இன்று லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு இவர் தலைமையேற்றார். இங்கு திரளாக கூடியிருந்தவர்களிடம் பேசினார்.

இவரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா பல முறை கேட்டும் ஹபீஸ் சையீதை பாகிஸ்தான் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. பாகிஸ்தான் பலமுறை இந்தியாவிடம் உறுதி கொடுத்தாலும் இதனை நிறைவேற்ற முன்வரவில்லை. இப்படி உலவ விடுவது ஏன் என இந்தியா தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

தலைமறைவாக இருந்து வந்த ஹபீஸ் சையீது தலைக்கு அமெரிக்க 10 மில்லியன் டாலர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments