ம் காரணமாகவே இந்திய பொருளாதாரம்
சரிந்துள்ளதாகவும், மேலும் டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து
வருவதால் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும், முதலீட்டாளர்கள் யாரும் அஞ்ச
தேவையில்லை, முதலீட்டை கட்டுப்படுத்தும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை.
வளர்ச்சி என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரச்னைகளால் தொடர்புடையது
இதனை சீராக கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
விரைவில் நல்ல முடிவுகள் வரும் என்றும் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்
கூறினார்.மேலும் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை திரும்ப
பெறுவதால் சந்தையில் ஏற்றம் இறக்கம் வரத்தான் செய்யும் என்றார்.
முதலீடு அதிகரிக்கும்:
இந்திய
ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் கீழ்நோக்கி செல்கிறது. குறிப்பாக இன்று
ரூ.65-ஐ எட்டியுள்ளது. பண மதிப்பு பல்வேறு அச்சத்தை ஏற்படுத்தி வந்தன.
இந்நிலையில் இதுகுறித்து டில்லியில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்
பேட்டியளித்தார்.
அவர் இன்று நிருபர்களிடம் பேசுகையில் : அன்னிய முதலீடு மற்றும் ஏற்றுமதி
அதிகரித்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரிவிற்கு சர்வதேச பொருளாதார சூழல்கள்
தான் காரணம். இதனை தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கையினை எடுத்து
வருகிறது. அதனால் முதலீட்டாளர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
நாட்டின் வளர்ச்சிக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. இந்தியாவை
போன்று மற்ற வளரும் நாடுகளும் இதே பிரச்னையை எதிர் கொண்டுள்ளன. ஆனால் மற்ற
நாடுகளை காட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் நன்றாக உள்ளது. ஏற்ற
இறக்கங்களை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது முதல் காலாண்டில்
உற்பத்தி சரிந்து காணப்படுகிறது. இனி வரும் காலத்தில் இது அதிகரிக்கும்
அதன்மூலம் எதிர்காலத்தில் முதலீடு அதிகரிக்கும் . மேலும் தற்போது நாட்டின்
அந்நிய முதலீடும், ஏற்றுமதியும் உயர்ந்து வருகிறது. கடன்களும்
கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
சிதம்பரம் பேட்டி சரியல்ல:
இவரது
பேட்டி குறித்து இந்திய கம்யூ மற்றும் பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தா. பாண்டியன் கூறுகையில் : சிதம்பரம் பொருளாதாரத்தை
சொற்களால் வெல்ல முடியும் என நினைக்கிறார். இது தவறானது. ஏற்றுமதி
அன்னியசெலாவணிக்கு மிக முக்கியம். ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்ற போது
இந்தியா ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் இருந்தது. ஆனால் அப்போது
டாலருக்கான இந்திய மதிப்பு 1 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று 65 ரூபாய்க்கு
போய் விட்டது. எரிபொருள் இறக்குமதி கொள்கையில் இந்தியா எடுத்துள்ள நிலை
தவறானது. பா.ஜ.,வை சேர்ந்த ராஜாவும் சிதம்பரம் பேச்சு குறித்து குறை
கூறியுள்ளார்.
Comments